மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- அரசாணை வெளியீடு

 

மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- அரசாணை வெளியீடு

தமிழக அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த நிலையில், அதனை கடந்த ஆண்டு 59 ஆக அதிகரித்து சட்டமன்றத்தில் தமிழக அரசு சட்டம் இயற்றியது. அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த ஆணை பொருந்தும் எனவும் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- அரசாணை வெளியீடு

இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களை போல தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதையும் 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஓய்வு பெறும் நிலையிலுள்ள மின்வாரிய ஊழியர்கள் கூடுதலாக ஓர் ஆண்டுகள் பணியாற்றுவர். அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்ததன் பேரில், தற்போது வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.