ஏழை மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்காக ஸ்மார்ட்போன் வாங்க உள்ளூர்வாசிகள் பணம் நன்கொடை

 

ஏழை மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்காக ஸ்மார்ட்போன் வாங்க உள்ளூர்வாசிகள் பணம் நன்கொடை

ஹைதராபாத்: ஏழை மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்காக ஸ்மார்ட்போன் வாங்க உள்ளூர்வாசிகள் பணம் நன்கொடை வசூலித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இப்போது பெரும்பாலான வீடுகளில் யாராவது ஒருவரிடமாவது ஸ்மார்ட்போன் இருப்பதால் அதை பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளை பார்க்க முடியாமல் பல ஏழை மாணவ, மாணவிகள் அவதியுற்று வருகின்றனர்.

ஏழை மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்காக ஸ்மார்ட்போன் வாங்க உள்ளூர்வாசிகள் பணம் நன்கொடை

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஒரு உள்ளூர்வாசிகள் ஏழை குழந்தைகளின் கல்விக்காக ஸ்மார்ட்போன் வாங்க பணம் நன்கொடை வசூலித்து வருகின்றனர். அந்தப் பணத்தில் ஸ்மார்ட்போன்கள் வாங்கி ஆன்லைன் வகுப்புககளில் கலந்து கொள்ள முடியாத ஏழை மாணவ, மாணவிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். சிலர் பணமாக கொடுக்காமல் தங்கள் வீட்டில் கூடுதலாக மீதமுள்ள ஸ்மார்ட்போனை நன்கொடையாக வழங்கி விடுகின்றனர்.

சமீபத்தில் ஏழை மாணவர்கள் சிலர் பெற்றோர்கள் தங்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.