வ.உ.சி மார்க்கெட்டை சூழ்ந்த மழைநீர் – வியாபாரிகள் அவதி

 

வ.உ.சி மார்க்கெட்டை சூழ்ந்த மழைநீர் – வியாபாரிகள் அவதி

கனமழை காரணமாக ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தண்ணீர் சூழ்ந்ததால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், கொரோனா பரவல் காரணமாக வ.உ.சி. பூங்கா பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 2 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் இரவு மொத்த வியாபாரமும், காலை 12 மணி வரை சில்லறை வியாபாரமும் நடைபெற்று வருகிறது.

இரண்டு நாட்களாக மழை சேறும் சகதியுமான ஈரோடு கனி மார்க்கெட் - TopTamilNews

மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்கும் விதமாக வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இதற்காக கடந்த புதன் கிழமை முதல் வெள்ளி வரை 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழையால் வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதனால் இன்று வழக்கம் போல் மார்க்கெட் செயல்பட தொடங்கியபோதும் மழைநீர் சூழ்ந்ததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். எனவே மழைநீர் வடியும் வகையில் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அவர்கள் மாநகராட்சிக்கு நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வ.உ.சி மார்க்கெட்டை சூழ்ந்த மழைநீர் – வியாபாரிகள் அவதி