ஈரோட்டில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் – பொதுமக்கள் அவதி

ஈரோட்டில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் – பொதுமக்கள் அவதி

ஈரோட்டில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். ஈரோடு பார்க்ரோடு, ராஜாராம் தியேட்டர் அருகே பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 50-க்கும் மேற்பட்ட லாரி பார்சல் சர்வீஸ் அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாநகராட்சி பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், பார்க் ரோடு பகுதியில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை மழைநீர் சூழ்ந்து கொண்டது.

ஈரோட்டில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் – பொதுமக்கள் அவதி

மேலும், மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்ததால் கடும் துற்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மழைநீர் தேங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அப்பகுதி மக்கள், நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருக்கும் கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோட்டில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் – பொதுமக்கள் அவதி