தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

காற்றழுத்த தாழ்வு மண்டலம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம், புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

வடக்கு வங்கக்கடல், வட மேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.