குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : ‘அடுத்த 4 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில் மழை…!

 

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : ‘அடுத்த 4 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில் மழை…!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர் ,தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர்,தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வருகின்ற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், திண்டுக்கல் , திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : ‘அடுத்த 4 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில் மழை…!

14ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி ,கோயம்புத்தூர் ,திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் ,இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : ‘அடுத்த 4 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில் மழை…!

மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் 11 ஆம் தேதி வரை மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 12-ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதி மேற்கு வங்க கடலோரப் பகுதி , வடக்கு அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.அத்துடன் இன்று முதல் 14ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது