இந்த மாவட்டங்களில் தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கனமழை!

 

இந்த  மாவட்டங்களில் தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கனமழை!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று சேலம்,கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் , ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மாவட்டங்கள் வடக்கு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் ,புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

இந்த  மாவட்டங்களில் தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கனமழை!

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகின்ற 29 முதல் 31ஆம் தேதி வரை கோயம்புத்தூர் , நீலகிரி மாவட்டங்கள் ,கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கோரத் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த  மாவட்டங்களில் தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கனமழை!

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் , நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

இந்த  மாவட்டங்களில் தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கனமழை!

இன்று முதல் வருகின்ற 31-ஆம் தேதி வரை தமிழ்நாடு, ஆந்திர கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், வட கிழக்கு வங்க கடல், மத்திய கிழக்கு வங்க கடல் ,அந்தமான் கடல் பகுதி ,மத்திய வங்கக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.