‘சென்னையின் பல இடங்களில் மிதமான மழை’.. அடுத்த சில மணி நேரம் மழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் நாகை, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மேடவாக்கம், செம்பாக்கம், மீனம்பாக்கம், பல்லாவரம், தி.நகர், ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடமேற்கு திசையில் இருந்து வீசும் கடல்காற்று காரணமாக அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Most Popular

பயிற்சியின்போது லவ்… பெற்றோருக்கு டிமிக்கு… 40 வயது பயிற்சியாளருடன் 20 வயது மாணவி ஓட்டம்

பயிற்சிக்கு சென்ற மாணவி, பயிற்சியாளருடன் ஓட்டம் பிடித்துள்ளார். மகளை கண்டுபிடித்து தரக் கோரி காவல்துறையில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் மண்டலம் ராஜூலூ கண்டிரிகா கிராமத்தில் ஜீவாதார் என்ற...

“அந்த ரெண்டு பேரால அறுநூறு பேர் கொரானா அச்சத்தில் .. “-கேரளா விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்க போன 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

விபத்தில் சிக்கிய கோழிக்கோடு விமானத்தில் பயணித்த 190 பயணிகளுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டதில் இரண்டு பேருக்கு பாசிட்டிவ் முடிவு வந்துள்ளதால், அங்கு மீட்பு பணியிலிருந்த 600 பேர் கொரானா அச்சத்தில் உள்ளார்கள் . கடந்த...

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இதே போன்று மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் கொரோனா...

100 அடியை நெருங்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 95.10 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக...