சிட்னி மைதானத்தில் மழை – டெஸ்ட் போட்டி கைவிடப்படுமா?

 

சிட்னி மைதானத்தில் மழை – டெஸ்ட் போட்டி கைவிடப்படுமா?

ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானப் பகுதியில் மழை பெய்து வருகிறது. அதனால், ஆட்டம் தடைப்பட்டது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.மூன்றாம் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. முதல் பேட்டிங் ஆஸ்திரேலியா ஆடி வருகிறது.

சிட்னி மைதானத்தில் மழை – டெஸ்ட் போட்டி கைவிடப்படுமா?

ஆஸ்திரேலியாவில் இன்று அறிமுகமாகும் புகோவ்ஸ்கியுடன் சீனியர் வீரர் டேவிட் வார்னர் இணைந்து ஓப்பனிங் இறங்கினார்கள். வார்னரின் வருகை அணிக்குப் பெரும் பலம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் வார்னரின் விக்கெட்டை தூக்கினார் முகம்மது சிராஜ்.

புகோவ்ஸ்கி, லபுஷேன் ஜோடி சிறப்பாக ஆடியது. நல்ல பார்டனர் ஷிப் அளித்தது. இருவரையும் பிரிக்க பும்ராவும் சிராஜ் அஸ்வின் பல வகைகளிலும் முயன்றும் முடியவில்லை. இந்தப் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமாகும் சைனி புகோவ்ஸ்கி விக்கெட்டை வீழ்த்தினார். எல்.பி.டபுள்யூ முறையில் புகோவ்ஸ்கி ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் – லபுஷேன் ஜோடி நிலைத்து ஆடியது.

சிட்னி மைதானத்தில் மழை – டெஸ்ட் போட்டி கைவிடப்படுமா?

55 ஓவர்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆஸ்திரேலிய அணி 166 ரன்களை எடுத்துள்ளது. இந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை வலுக்கவே ஒருநாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.

மீண்டும் நாளை ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிட்னி மைதானப் பகுதியில் இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என்றே வானிலை அறிக்கை சொல்கிறதாம். குறிப்பாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நிச்சயம் நீடிக்கும் என்றே தெரிகிறது. எனவே, மூன்று நாட்கள் ஆட்டம் மழையால் பாதித்தால் பிட்ச் தன்மையும் மாறும். அதற்குப் பிறகு யாருக்குச் சாதகம் என்பதைக் கணிக்க முடியாது.

சிட்னி மைதானத்தில் மழை – டெஸ்ட் போட்டி கைவிடப்படுமா?

மேலும், மழை நீடிக்கும்பட்சத்தில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி கைவிடப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றன. நாளையும் நாளை மறுநாளின் வானிலை பொறுத்தே இந்த ஆட்டத்தின் போக்கு அமையும்.