தொடரும் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்… 1,300 ரயில்கள் ரத்து… ரயில்வேக்கு ரூ.1000 கோடி இழப்பு..

 

தொடரும் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்… 1,300 ரயில்கள் ரத்து… ரயில்வேக்கு ரூ.1000 கோடி இழப்பு..

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் காரணமாக இதுவரை 1,300க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து அல்லது மாற்றி விடப்பட்டதால் ரூ.1,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப் மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரயில்வே அந்த மாநிலங்களுக்கான ரயில் போக்குவரத்தை (பயணிகள் மற்றும் சரக்கு) ரத்து செய்தது.

தொடரும் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்… 1,300 ரயில்கள் ரத்து… ரயில்வேக்கு ரூ.1000 கோடி இழப்பு..
டி.ஜே. நரேன்

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்துக்கான சரக்கு ரயில்களை தொடர்ந்து நிறுத்தி வைத்து இருக்கும் மத்திய அரசின் மாற்றாந்தாய் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சூழ்நிலையில் பஞ்சாய் ரயில்கள் ரத்து குறித்த உண்மை நிலவரத்தை ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே கூடுதல் இயக்குனர் ஜெனரல் டி.ஜே. நரேன் இது தொடர்பாக கூறியதாவது: பஞ்சாபில் 32 இடங்களில் ரயில் பாதைகளில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் எங்களால் ரயில்களை இயக்க முடியவில்லை.

தொடரும் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்… 1,300 ரயில்கள் ரத்து… ரயில்வேக்கு ரூ.1000 கோடி இழப்பு..
பியூஸ் கோயல்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தற்போது நடைபெற்று போராட்டத்தால் 1,300க்கும் அதிகமான பணிகள் ரயில்கள் ரத்து அல்லது மாற்றிவிடப்பட்டதால் ரயில்வேக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில்களை இயக்க முடியவில்லை. ரயில்வேக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை தீவிரமானது. நாங்கள் எந்தவொரு பெரிய ரயில் விபத்துக்களையும் நிகழ்வதை விரும்பவில்லை. சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகரித்துள்ளோம். அதனால் ரயில் முன்பு யார் வந்தாலும் பைலட்டால் ரயிலை நிறுத்துவது மிகவும் கடினம். பாதைகளில் போராட்டக்காரர்கள் அகற்றப்படுவார்கள் மற்றும் அதை சுற்றி எந்த பிரச்சினையும் இருக்காது என்று உறுதியளித்தால்தான் ரயில்வே ரயில்களை இயக்க முடியும் என்று பஞ்சாப் அரசுக்கு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.