முதல் விரைவு சரக்கு ரயிலை இயக்க உள்ள இந்திய ரயில்வே!

 

முதல் விரைவு சரக்கு ரயிலை இயக்க உள்ள இந்திய ரயில்வே!

இந்திய ரயில்வே முதன்முறையாக ஹைதராபாத்திலிருந்து டெல்லிக்கு விரைவு சரக்கு ரயில் சேவையை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வேக்கு வருவாய் தரக்கூடியது சரக்கு ரயில் போக்குவரத்துதான்.

முதல் விரைவு சரக்கு ரயிலை இயக்க உள்ள இந்திய ரயில்வே!

அதே நேரத்தில் வருவாய் குறைவாக இருந்தாலும் பயணிகள் ரயிலுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக பல ரயில்சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் முதன்முறையாக ஹைதராபாத்தில் இருந்து புதுடெல்லிக்கு அதிவிரைவு சரக்கு ரயில் சேவைய இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

முதல் விரைவு சரக்கு ரயிலை இயக்க உள்ள இந்திய ரயில்வே!வருகிற 5ம் தேதி இயக்கப்படும் இந்த சரக்கு ரயில், ஹைதராபாத் – டெல்லி இடையேயான 700 கி.மீ தூரத்தை மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பயணித்து 34 மணி நேரத்தில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பயணிகள் ரயில் இயக்கப்படும் போது சரக்கு ரயில்கள் குறைந்த வேகத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுதான் சென்றடையும். தற்போது ஒரே சீராக ஒரு சில இடங்களில் மட்டும் நிறுத்தி சரக்கு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுவாக ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு ஒரு டன் சரக்கை அனுப்ப ரூ.2500 கட்டணம் மட்டுமே

முதல் விரைவு சரக்கு ரயிலை இயக்க உள்ள இந்திய ரயில்வே!வசூலிக்கப்படுகிறது. இதுவே சாலை மார்க்கமாக அனுப்பினால் இதை விட பல மடங்கு செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிவிரைவு சரக்கு ரயில் சேவை மூலம் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். இதன் மூலம் இன்னும் அதிக அளவில் ரயில் மூலம் சரக்கு அனுப்ப பலரும் முன்வருவார்கள், அதன் மூலம் ரயில்வேயின் வருவாய் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.