தமிழகத்தில் கூடுதலாக 3 ரயில்களை இயக்க தமிழக அரசுக்கு ரயில்வே கோரிக்கை!

 

தமிழகத்தில் கூடுதலாக 3 ரயில்களை இயக்க தமிழக அரசுக்கு ரயில்வே கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் ரயில் சேவைகள் முடக்கப்பட்டு இருந்தது. நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர், பல சேவைகளுக்கு அனுமதி அளித்ததன் படி ரயில்சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் புறநகர் ரயில்கள் இயக்கப்படாது என்றும் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், காட்பாடி – கோயம்புத்தூர், கோயம்புத்தூர் – மயிலாடுதுறை மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் கூடுதலாக 3 ரயில்களை இயக்க தமிழக அரசுக்கு ரயில்வே கோரிக்கை!

இந்நிலையில் தமிழகத்தில் கூடுதலாக 3 நாள்தோறும் ரயில்களை இயக்க தமிழக அரசுக்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது. திருச்சி- செங்கல்பட்டு வரை 2 ரயில்களும், அரக்கோணம்- கோயம்புத்தூர் வரை ஒரு ரயிலையும் இயக்க அனுமதி வாங்குமாறு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. திருச்சி- செங்கல்பட்டுவரும் ரயில்களில் ஒன்று அரியலூர் மார்க்கமாகவும், மற்றொன்று தஞ்சாவூர் மார்க்கமாகவும் செல்லக்கூடியது.