ரயில்களில் முன்பதிவு: ரூ.1885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது – இந்திய ரயில்வே

 

ரயில்களில் முன்பதிவு: ரூ.1885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது – இந்திய ரயில்வே

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதனால் முன்பதிவு செய்த பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக ரயில் நிலையங்களுக்கு மக்கள் வர வேண்டாம் என்றும் அதனை ரத்து செய்ய 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியது. அதே போல ரத்து செய்யப்படாத ரயில்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்ய 3 மாதம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளின் பணத்தை திருப்பி கொடுக்க அட்டவணை தயார் செய்யப்பட்டு திருப்பி அளிக்கப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்களில் முன்பதிவு: ரூ.1885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது – இந்திய ரயில்வே

ரயில்களில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகளுக்காக ரூ.1,885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மார்ச் 21 முதல் மே 31 ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் ரத்துக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டதாக ரயில்வே விளக்கமளித்துள்ளது.