நாளைக்கு போற ரயில் பயணத்துக்கு இ- பாஸ் கட்டயம் என இன்று மாலை அறிவித்த அரசு! பயணிகள் குமுறல்

 

நாளைக்கு போற ரயில் பயணத்துக்கு இ- பாஸ் கட்டயம் என இன்று மாலை அறிவித்த அரசு! பயணிகள் குமுறல்

தமிழகத்தில் கோவை – மயிலாடுதுறை (செவ்வாய்க்கிழமை தவிர்த்து), ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ( மதுரை – விழுப்புரம் – மதுரை), இன்டெர்சிட்டி சூப்பர் பாஸ்ட் (திருச்சி – நாகர்கோயில் -திருச்சி), கோவை சூப்பர் பாஸ்ட் (கோவை -காட்பாடி -கோவை ) உள்ளிட் நான்கு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில் ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்கோ/ மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ ரயில்மூலம் செல்ல விரும்புவோர் கட்டாயம் தமிழக அரசிடம் ஆன்லைன் மூலம் தங்களது விவரங்களை பதிவுசெய்து e-pass பெற்றிருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் நாளை 4 வழித்தடங்களிலும் செல்லும் ரயில்களில் பயணம் செய்வோர் கட்டாயம் இ-பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைக்கு போற ரயில் பயணத்துக்கு இ- பாஸ் கட்டயம் என இன்று மாலை அறிவித்த அரசு! பயணிகள் குமுறல்

இந்நிலையில் தமிழகத்துக்குள் இயக்கப்படும் 4 ரயில்களுக்கு இ-பாஸ் கட்டாயத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்பதிவு செய்யும் போது இ-பாஸ் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று பயணிகள் குமுறுகின்றனர். பயணத்துக்கு முதல்நாள் திடீரென இ-பாஸ் கட்டாயம் என்றால் எப்படி பெற முடியும் என்று பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.