என் மகன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ததில் மகிழ்ச்சி- வீர மரணமடைந்தவரின் தாய்!

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே நடைபெற்ற மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பழனி என்பவர் உட்பட இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் வீர மரணம் அடைந்தனர். இதில், தெலங்கானாவின் சூர்யபேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் பாபு என்ற ராணுவ கமெண்டோ அதிகாரியும் உயிரிழந்தார்.

இந்நிலையில் தனது மகனின் இறப்பு குறித்து செய்தியாளர்களிடம் உருக்கமாக பேட்டியளித்த சந்தோஷ் பாபுவின் தாய், “ஒரு தாயாக நான் மிகவும் வருந்துகிறேன். இருப்பினும் எனது மகன் நாட்டிற்காக போரிட்டு உயிர்த்தியாகம் செய்தான் என நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்” என கண்கலங்க தெரிவித்தார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, “இந்திய வீரர்களின் உயிரிழப்பால் ஏற்பட்ட வலியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நாட்டிற்காக உயிர்த்தியாகம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

கணவனை கட்டிவைத்து அவரது கண் முன்னே மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

ஆந்திராவில் பழங்குடியின பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஜிம்மிநகர் என்ற பகுதியில் வசித்துவருகின்றனர். தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வரும் இந்த...

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஸ்பான்சரில் இருந்து விலகும் விவோ நிறுவனம்?

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலக சீனாவின் விவோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலும், சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம்...

’’என் கனவு நிறைவேறியிருக்கிறது’’ – வீடியோவில் அத்வானி உருக்கம்

அயோத்தில் நாளை ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கோலாகலமாக நடைபெற இருக்கின்ற நிலையில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’’ராமர் கோயில் கட்ட வேண்டும்...

ஒருதலைக் காதலை கண்டித்த காதலியின் தந்தை… அதன்பின் நடந்த விபரீதம்!

ஒருதலைக் காதலை கண்டித்த காதலியின் தந்தை... அதன்பின் நடந்த விபரீதம்! மதுரையில் ஒருதலைக் காதலை காதலியின் தந்தை கண்டித்ததால் நண்பர்களுடன் காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞர், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை அடித்து...