ஒரு தகவலும் தெரியல! மோடி உளறுகிறார் – ராகுல்காந்தி விளாசல்

 

ஒரு தகவலும் தெரியல! மோடி உளறுகிறார் – ராகுல்காந்தி விளாசல்

ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் என்று மோடி சொல்வது தவறானது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் 1500 ஹெக்டேர் பரப்பளவில் 750 மெகாவாட் திறக் கொண்ட சூரிய மின்சக்தி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின்திட்டத்தை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்துவைத்து பிரதமர் மோடி பேசும்போது, “உலகளவில் அதிக அளவில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் முதல் 5 நாட்களில் இந்தியா இருந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத எரிசக்திக்கான உலகச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. மத்தியப்பிரதேச அரசு வருங்காலத்தில் சூழலுக்கு கேடில்லாத எரிசக்தியை குறைந்த விலையில் வழங்கும் மையமாக விளங்கும்” என தெரிவித்தார்.

ஒரு தகவலும் தெரியல! மோடி உளறுகிறார் – ராகுல்காந்தி விளாசல்

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி தவறான தகவல்களை தெரிவித்த்துள்ளார். இந்தியாவிலேயே இதை விட பெரிய 3 சூரிய மின்சக்தி திட்டங்கள் இருக்கின்றன. ரேவாவில் சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே பெரிய திட்டம் என மோடி சொல்வது தவறானது” எனக் குறிப்பிட்டுள்ளார்