வேளாண் சட்டம் குறித்து ராகுல்காந்தி ஆவேச பேச்சு!

 

வேளாண் சட்டம் குறித்து ராகுல்காந்தி ஆவேச பேச்சு!

வேளாண் சட்டம் தொடர்பாக ராகுல் காந்தி மக்களவையில் ஆவேசமாக பேசினார். வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ராகுல்காந்தி பேசிய போது பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது!

மக்களவையில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, “பிரதமர் இரண்டு பேருக்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். ஜிஎஸ்டி மூலம் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இன்று நாட்டில் வேலைவாய்ப்பு என்பதே இல்லை. வேளாண் சட்டத்தால் விவசாயிகள் தங்கள் நிலத்தை இழப்பார்கள், சிறு விவசாயிகள் இருக்க மாட்டார்கள். வேளாண் சட்டத்தால் மீண்டும் இந்தியாவில் பஞ்சம் உருவாக வாய்ப்புள்ளது. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்தான். அதை உடைப்பதுதான் மத்திய அரசின் நோக்கம். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றே ஆகவேண்டும். விவசாயிகளுக்கான போராட்டம் என்று மட்டும் நினைக்க வேண்டாம். இது நாட்டிற்கான போராட்டம்.

வேளாண் சட்டம் குறித்து ராகுல்காந்தி ஆவேச பேச்சு!

மண்டி அமைப்புகளை ஒழிப்பதே வேளாண் சட்டத்தின் மிக முக்கிய நோக்கம். வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை கிடைக்கிறது?. 4 நண்பர்களுக்காக இயற்றப்பட்டது தான் இந்த வேளாண் சட்டம். விவசாயி தனது விளை பொருட்களின் விலையை நிர்ணயிக்க, தொழிலதிபர் முன் சென்று நிற்க வேண்டும். இந்தியாவை 4 பேர் தான் வழி நடத்தி வருகின்றனர், அந்த 4 பேர் யார் என அனைவருக்கும் தெரியும். உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகளை ஒரே இடத்தில் மொத்தமாக வாங்கினால் சந்தைக்கு யார் செல்வார்கள்? சந்தைகளை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது புதிய வேளாண் சட்டங்கள்” எனக் கூறினார்.