“பிரதமர் மோடி தனக்கு வேண்டப்பட்ட தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துகளை பரிசாக அளிக்கிறார்”

 

“பிரதமர் மோடி தனக்கு வேண்டப்பட்ட தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துகளை பரிசாக அளிக்கிறார்”

வேண்டப்பட்ட தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துகளை பிரதமர் மோடி பரிசளிப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

“பிரதமர் மோடி தனக்கு வேண்டப்பட்ட தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துகளை பரிசாக அளிக்கிறார்”

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, “70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்த சொத்துக்களை வெறும் 7 ஆண்டுகளில் பிரதமர் மோடி விற்றுவிட்டார். வேண்டப்பட்ட தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துகளை பிரதமர் மோடி பரிசளித்துவருகிறார். தெசிய சொத்துக்களை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

42,000 கிலோமீட்டர் நீளமுள்ள மின் வழித்தடங்களை பிரதமர் மோடி தனியாருக்கு தாரை வார்க்கிறார். நாட்டிலுள்ள 25 விமான நிலையங்கள், உணவு தானிய கிடங்குகள் தனியாருக்கு விற்க முடிவு செய்துவிட்டார். பி.எஸ்.என்.எல்க்கு சொந்தமான பல ஆயிரம் செல்போன் கோபுரங்களையும் தனியாருக்கு விற்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு என்பதையே மத்திய அரசு ஒழிக்க பார்க்கிறது. அரசு செயல்பாடுகளை அம்பலபடுத்துவதே இளைஞரின் கடமை.

கடந்த 70 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை என பாஜகவினரும், பிரதமர் மோடியும் கூறிவருகின்றனர். ஆனால் கடந்த 70 ஆண்டுகளில் உருவானவற்றை விற்க மத்திய நிதி அமைச்சர் முடிவு செய்துள்ளார். நாங்கள் தனியார் மயமாக்கலுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தனியார் மயமாக்குவதற்கு முறையான காரணங்கள் இருக்க வேண்டும். ரயில்வேதுறையை தனியார் மயமாக்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தான் கோரிக்கை வைக்கிறோம். ஏனெனில் கோடிக்கணக்கான மக்கள் போக்குவரத்துக்காக ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே துறையில் பல லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.” என தெரிவித்தார்.