ராகுல்காந்தியை சந்தித்த பிரசாந்த் கிஷோர்!!

 

ராகுல்காந்தியை சந்தித்த பிரசாந்த் கிஷோர்!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை, டில்லியில் உள்ள அவரது இல்லத்தில், பிரசாந்த் கிஷோர் இன்று சந்தித்துள்ளார்.

ராகுல்காந்தியை சந்தித்த பிரசாந்த் கிஷோர்!!

இந்தியாவின் நவீன சாணக்கியன் என்று சொல்லப்படுகிறார் தேர்தல் உத்தி ஆலோசகரான பிரசாந்த் கிஷோர். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி கடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பிரசாந்த் கிஷோரின் இந்திய அரசியல் நடவடிக்கை குழு (ஐ-பேக்) நிறுவனத்தை ஒப்பந்தம் செய்தார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அடுத்து தமிழகத்தில் திமுகவுடன் கைக்கோர்த்த கிஷோர் ஸ்டாலினை முதல்வராக்கி சாதனை படைத்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை, டில்லியில் உள்ள அவரது இல்லத்தில், பிரசாந்த் கிஷோர் இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, கே.சி.வேணுகோபால், ஹரிஷ் ராவத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்தத் தலைவர்களும் உடனிருந்தனர். இந்த சந்திப்பில், 2024ல் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், 2022ல் நடக்கவுள்ள பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.