மனக்குமுறலை கொட்டிய தொழிலதிபர்.. மோடி அரசாங்கத்தின் கொள்கையில் விளைவுதான் இது.. ராகுல் காந்தி தாக்கு

 

மனக்குமுறலை கொட்டிய தொழிலதிபர்.. மோடி அரசாங்கத்தின் கொள்கையில் விளைவுதான் இது.. ராகுல் காந்தி தாக்கு

தொழில்துறையின் மிகவும் கஷ்படுவதாக தனது மனக்குமுறலை தன்னிடம் கொட்டிய தொழிலதிபரை மேற்கோள்காட்டி, நட்பு முதலாளிகளுக்கு மட்டுமே செயல்படும் மோடி அரசின் கொள்கையின் விளைவுதான் இது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். ராகுல் தனது பயணத்தின் முதல் தினமான நேற்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கோவையில் ராகுல் காந்தியுடன் உரையாடும் நிகழ்ச்சியும் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய ஒரு குறு,சிறு மற்றும் நடுத்தர துறையை சேர்ந்த தொழிலதிபர், நரேந்திர மோடியின் அரசால் தாங்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், தங்களுக்காக நீங்கள்தான் குரல் கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.

மனக்குமுறலை கொட்டிய தொழிலதிபர்.. மோடி அரசாங்கத்தின் கொள்கையில் விளைவுதான் இது.. ராகுல் காந்தி தாக்கு
ராகுல் காந்தி

ராகுல் காந்தி தனது டிவிட்டரில், அந்த தொழிலதிபர் பேசிய வீடியோ பதிவை பதிவேற்றம் செய்து இருந்தார். அதன் மேலே இது மக்களின் நம்பிக்கையையும், தேவைகளையும் நசுக்குவதற்கும் ஒரு சில நட்பு முதலாளிகளுக்கு மட்டுமே வேலை செய்வதற்கான மோடி அரசாங்கத்தின் கொள்கையின் விளைவுதான் இது என்று பதிவு செய்து இருந்தார். முன்னதாக ராகுல் காந்தி டிவிட்டரில், கொங்கு பகுதியில் எனது தமிழ் சகோதார சகோதரிகளுடன் நேரத்தை செலவிட இன்று தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மோடி அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தமிழர்களின் தனித்துவமான கலாச்சாரத்தை நாம் பாதுகாப்போம் என்று பதிவு செய்து இருந்தார்.

மனக்குமுறலை கொட்டிய தொழிலதிபர்.. மோடி அரசாங்கத்தின் கொள்கையில் விளைவுதான் இது.. ராகுல் காந்தி தாக்கு
பிரதமர் மோடி

கோவையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சாலை பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அப்போது பேசுகையில், நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டின் காலாச்சாரம், மொழி மற்றும் மக்கள் மீது எந்த மரியாதையும் இல்லை. தமிழ் மக்களும், அவர்களின் மொழியும், கலாச்சாரமும் அவரது கருத்துக்களுக்கும், கலாச்சராத்திற்கும் அடிபணிய வேண்டும் என்று அவர் கருதுகிறார். வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தால் விவசாயிகள் நிறுவனங்களின் ஊழியர்களாக ஆக்கப்படுவார்கள். அதனால்தான் நாங்கள் அவர்களுக்கு எதிராக போராடுகிறோம். தமிழகம் இந்தியாவுக்கு முன்மாதிரயாக அமையும் என்று நான் நம்புகிறேன். இந்த மாநிலத்தில் விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. அதனால்தான் நாங்கள் உங்களுக்கு உதவ முயற்சிக்கிறோம்.