எல்லையில் படைகளை நிறுத்தும் சீனா… மோடிக்கு தைரியம் இல்லை… ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 

எல்லையில் படைகளை நிறுத்தும் சீனா… மோடிக்கு தைரியம் இல்லை… ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சீனா என்ற வார்த்தையை சொல்ல மோடி பயப்படுகையில், சீனா எல்லையில் படைகளை நிலைநிறுத்துகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி டிவிட்டரில், சீனா என்ற வார்த்தையை கூட சொல்ல நம் பிரதமர் பயப்படுகையில், சீனா தொடர்ந்து தனது படைகளை தயார் செய்யவும், கட்டமைக்கவும் மற்றும் நிலைநிறுத்தவும் செய்கிறது. ஒரு பேரழிவை தவிர்க்க உறுதியான நடவடிக்கை தேவை. துரதிர்ஷ்டவசமாக திரு மோடிக்கு தைரியம் இல்லை என்று பதிவு செய்து இருந்தார். மேலும் அதனுடன், எல்லையில் சீனா படைகளை நிலைநிறுத்துவது தொடர்பாக வெளியான செய்தியையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார்.

எல்லையில் படைகளை நிறுத்தும் சீனா… மோடிக்கு தைரியம் இல்லை… ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி

மற்றொரு டிவிட்டில், டெல்லியின் எல்லைகளில் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் மேலும், விவசாயிகள் தடுப்புகளை உடைத்து டெல்லிக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக தடுப்புகளை டெல்லி போலீசார் வலுப்படுத்தியுள்ளனர். இதனை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி டிவிட்டில், மத்திய அரசு பாலங்களை கட்ட வேண்டும் சுவர்களை அல்ல என்று பதிவு செய்து இருந்தார். மேலும், போலீசார் ஏற்படுத்திய தடுப்புகளின் படத்தையும் பதிவேற்றம் செய்து இருந்தார்.

எல்லையில் படைகளை நிறுத்தும் சீனா… மோடிக்கு தைரியம் இல்லை… ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தடுப்பு வேலி

மேலும் மற்றொரு டிவிட்டில் விவசாய தலைவர்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி மோடி அரசை குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி டிவிட்டரில், மோடி நிர்வாகத்தின் பாணி. அவற்றை மூடு, அவற்றை துண்டிக்கவும், அவற்றை கீழே நசுக்கவும் என்று பதிவு செய்து இருந்தார். மேலும் அதனுடன், விவசாயிகள் அமைப்புகள், ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் டிவிட்டர் கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் முடக்கியது தொடர்பாக வெளியான செய்தியையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார்.