மீண்டும் ஹத்ராஸ் பயணம்: ராகுல் காந்தி கார் நொய்டா எல்லையில் தடுத்து நிறுத்தம்!

மீண்டும் ஹத்ராஸ் பயணம்: ராகுல் காந்தி கார் நொய்டா எல்லையில் தடுத்து நிறுத்தம்!

ஹத்ராஸில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதற்காக சென்ற ராகுல் காந்தியின் கார் நொய்டாவில் தடுத்து நிறுத்தப்பட்டது.

உத்திர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாநிலத்தில் 19 வயதான தலித் பெண் 4 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்தார். அந்த பெண்ணின் முதுகெலும்பு சிதைக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என வெளியான செய்தி பதைபதைக்கச் செய்தது.

மீண்டும் ஹத்ராஸ் பயணம்: ராகுல் காந்தி கார் நொய்டா எல்லையில் தடுத்து நிறுத்தம்!

இதனை கண்டித்து கடந்த வியாழக்கிழமை, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இளம்பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல தடையை மீறி
ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும், அவரை காவல்துறையினர் இழுத்துச் சென்ற போது தவறி கீழே விழுந்தார். அதனால், அன்று ராகுல்காந்தி ஹத்ராஸ் செல்லவில்லை.

மீண்டும் ஹத்ராஸ் பயணம்: ராகுல் காந்தி கார் நொய்டா எல்லையில் தடுத்து நிறுத்தம்!

இதனைத்தொடர்ந்து , இன்று பிற்பகல் பிரியங்கா காந்தி கார் ஓட்ட, ராகுல் காந்தி அருகில் அமர்ந்து மீண்டும் ஹத்ராஸுக்கு புறப்பட்டனர். காங்கிரசார் பலர் பேருந்துகளில் பின் தொடர்ந்தனர். இந்த நிலையில், ராகுல் காந்தி சென்ற கார் நொய்டா எல்லையில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.