விரைவில் குணமடைவீர்கள்! அமித்ஷாவுக்கு ராகுல் ட்விட்

கொரோனா இந்தியாவை நான்கு மாதங்களாக பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இந்த நாள் வரை கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் முழு தீவிரத்துடன் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டறிய முயற்சி எடுத்து வருகின்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சென்ற வாரம் கோவாக்ஸின் மருந்து 30 வயது இளைஞர் உடலுக்குள் செலுத்தி பரிசோதனை செயய்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் முக்கியப் பொருப்புகளில் இருப்பவர்களுக்கு கொரோனா பரவுவது அச்சத்தை அதிகரிக்கிறது. தமிழகத்தில் பல அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா தொற்றால் அவதியுற்றனர். அமைச்சர் செல்லூர் ராஜீ மிகச் சமீபமாகத்தான் கொரோனாவிலிருந்து பூரண குணம் அடைந்தார்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

amit shah

அமித்ஷாவின் உடல் இயல்பாக இருந்தாலும் நோய்த் தொற்று உறுதியானதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டிருக்கிறார். இந்தச் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே பதிவு செய்திருக்கிறார்.

அமித்ஷா விரைவில் குணமடைய விரும்புவதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி பதிந்துள்ளார்.

Most Popular

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகிறது. தமிழகத்தில் கொரோனா  பாதிப்பால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.  இருப்பினும் அதற்கான தேர்வு...

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை...

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் கொலையில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை திடீர் மரணம்!

சாத்தான் குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு...

கேஸை திறந்துவிட்டு மகள்களை கொல்ல முயன்ற தந்தை… கதறிய மனைவி பூட்டை உடைத்து காப்பாற்றிய போலீஸ்

புகார் கொடுத்ததால் மனைவி மீதான கோபத்தில் பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸ் பற்ற வைக்க முயன்ற கணவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பிள்ளைகளை உயிரோடு எரிக்க முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை...