பட்ஜெட் தொடர்பான விவாதம்… காங்கிரஸ் தரப்பில் முதல் ஆளாக ராகுல் காந்தி பேசுகிறார்.. அதிர போகும் மக்களவை

பட்ஜெட் தொடர்பான விவாதம்… காங்கிரஸ் தரப்பில் முதல் ஆளாக ராகுல் காந்தி பேசுகிறார்.. அதிர போகும் மக்களவை

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது. காங்கிரஸ் தரப்பிலிருந்து முதல் ஆளாக ராகுல் காந்தி பேச உள்ளார். இதனால் இன்றைய மக்களவை நடவடிக்கைகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதில் அளிக்கிறார். அதனை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் கடந்த 1ம் தேதி தாக்கல் செய்த 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் மீதான விவாதம் மக்களவையில் எடுக்கப்பட உள்ளது.

பட்ஜெட் தொடர்பான விவாதம்… காங்கிரஸ் தரப்பில் முதல் ஆளாக ராகுல் காந்தி பேசுகிறார்.. அதிர போகும் மக்களவை
மத்திய பட்ஜெட்

பட்ஜெட் தொடர்பான விவாதத்தில், காங்கிரஸ் தரப்பிலிருந்து முதல் ஆளாக ராகுல் காந்தி பட்ஜெட் குறித்து பேச உள்ளார். ஏற்கனவே, மத்திய பட்ஜெட் திட்டங்கள் சமானிய மக்களை மோசமாக பாதிக்கும். ஒரு சில தொழிலதிபர்களுக்கு பயனிக்கும் கொள்கைகளை மோடி தலைமையிலான அரசாங்கம் பின்பற்றுகிறது என்று ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார்.

பட்ஜெட் தொடர்பான விவாதம்… காங்கிரஸ் தரப்பில் முதல் ஆளாக ராகுல் காந்தி பேசுகிறார்.. அதிர போகும் மக்களவை
நாடாளுமன்றம்

இந்த சூழ்நிலையில், இன்று மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் காங்கிரசிலிருந்து முதல் ஆளாக ராகுல் காந்தி பேசுவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி இன்று மத்திய பட்ஜெட்டை சும்மா கிழி கிழி என கிழிப்பார் என்று என தெரிகிறது.