இந்தியாவால் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியாது! நம்பவில்லை என்றால் 6 மாதம் காத்திருங்க! ராகுல்

இந்தியாவால் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியாது! நம்பவில்லை என்றால் 6 மாதம் காத்திருங்க! ராகுல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், தொற்றுநோயான கொரோனா வைரஸ் தாக்கத்தால் வரும் மாதங்களில் இந்திய இளைஞர்கள் கடுமையான வேலையின்மை எதிர்கொள்ளுவார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடியாது.

இந்தியாவால் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியாது! நம்பவில்லை என்றால் 6 மாதம் காத்திருங்க! ராகுல்

கோவிட்-19ஆல் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என நான் எச்சரிக்கை செய்தபோது ஊடகங்கள் என்னை கேலி செய்தன. இன்று நான் சொல்கிறேன் நம் நாட்டால் வேலைவாய்ப்புகள் வழங்க முடியாது. இதனை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், 6 முதல் 7 மாதங்கள் வரை காத்திருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 6 மாதங்களில் தான் சொன்னது உண்மைதான் என்பது தெரியவரும் என்பதைதான் 6 முதல் 7 மாதங்கள் காத்திருங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவால் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியாது! நம்பவில்லை என்றால் 6 மாதம் காத்திருங்க! ராகுல்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் முதல் கடந்த ஜூலை மாதம் வரை மொத்தம் 1.89 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். அதில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சம்பளதாரர்கள் 1.77 கோடி பேர் வேலை இழந்தனர். அதனை தொடர்ந்து கடந்த மே மாதத்தில் 1 லட்சம் சம்பள பணியாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். அதேசமயம் கடந்த ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இருப்பினும் கடந்த ஜூலையில் 50 லட்சம் வேலை இழந்துள்ளனர் இந்த தகவல்களை இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் வெளியிட்டுள்ளது.