வேளாண் சட்டங்களை அமல்படுத்தினால் எந்தவொரு இளைஞருக்கும் வேலை கிடைக்காது.. ராகுல் எச்சரிக்கை

வேளாண் சட்டங்களை அமல்படுத்தினால் எந்தவொரு இளைஞருக்கும் வேலை கிடைக்காது.. ராகுல் எச்சரிக்கை

வேளாண் சட்டங்கள அமல்படுத்தினால் நாட்டில் எந்தவொரு இளைஞருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்காது என்று பொதுமக்களை ராகுல் காந்தி எச்சரிக்கை செய்தார்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ரூபன்கரில் விவசாயிகள் பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: விவசாயம் பாரத மாதாவுக்கு சொந்தமானது, தொழிலதிபர்களுக்கு அல்ல. வாய்ப்புகளை வழங்குவதாக பிரதமர் சொல்கிறார்.

வேளாண் சட்டங்களை அமல்படுத்தினால் எந்தவொரு இளைஞருக்கும் வேலை கிடைக்காது.. ராகுல் எச்சரிக்கை
ராகுல் காந்தி

ஆமாம் அவர் வழங்குகிறார்: பட்டினி, வேலையின்மை மற்றும் தற்கொலை. அவர் விவசாயிகளுடன் பேச விரும்புகிறார் ஆனால் அவர்கள் (போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்) வேளாண் சட்டங்களை ரத்து செய்யாதவரை பேசமாட்டார்கள். இன்று ஒரு நபர், ஒரு தொழிலதிபர் இந்தியாவின் 40 சதவீத தானியங்களை கட்டுப்படுத்துகிறார். 40 சதவீத தானியங்கள் அவரது குடோனில் உள்ளன. 80 முதல் 90 சதவீத தானியங்களை கட்டுபடுத்த அந்த நபருக்கு இரண்டாவது சட்டம் உதவும்.

வேளாண் சட்டங்களை அமல்படுத்தினால் எந்தவொரு இளைஞருக்கும் வேலை கிடைக்காது.. ராகுல் எச்சரிக்கை
பிரதமர் மோடி

இந்தியாவின் இந்த (வேளாண்) சட்டங்கள் அமல்படுத்தப்பட்டவுடன், இந்தியாவில் எந்தவொரு இளைஞருக்கும் வேலை கிடைக்காது. வேளாண் தொழில்கள் அனைத்தையும் தனது இரு நெருங்கிய நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்தர மோடி விரும்புகிறார். இந்த சட்டங்களின் நோக்கம் அதுவே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.