மாணவர்கள் மனதிலிருந்து சொல்வதை கேட்டு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எடுங்க… அரசுக்கு ராகுல் வேண்டுகோள்

மாணவர்கள் மனதிலிருந்து சொல்வதை கேட்டு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எடுங்க… அரசுக்கு ராகுல் வேண்டுகோள்

கொரோனோ வைரஸ் தீவிரமாக பரவி வருவதற்கு மத்தியிலும், நீட், ஜே.இ.இ. தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் அந்த தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், நீட், ஜே.இ.இ. தீர்வுகள் தொடர்பாக மாணவர்கள் மனதிலிருந்து சொல்வதை கேட்டு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்கு வாருங்கள் என ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்கள் மனதிலிருந்து சொல்வதை கேட்டு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எடுங்க… அரசுக்கு ராகுல் வேண்டுகோள்
ராகுல் காந்தி

இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் ஏதாவது சொல்கிறார்கள். நீட், ஜே.இ.இ. தேர்வுகள் குறித்து மாணவர்கள் மனதிலிருந்து பேசுவதை இந்திய அரசு கேட்டு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்கு வர வேண்டும் என பதிவு செய்துள்ளார். ராகுல் காந்தி தவிர, டெல்லி கல்வி அமைச்சர் மனிஷ் சிசோடியாவும் ஜெ.இ.இ. மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் மனதிலிருந்து சொல்வதை கேட்டு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எடுங்க… அரசுக்கு ராகுல் வேண்டுகோள்
மனிஷ் சிசோடியா

நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்திலும் பொது நல வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இதனையடுத்து தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) கடந்த வெள்ளிக்கிழமையன்று, கூட்டு நுழைவு தேர்வு (ஜே.இ.இ.) (மெயின்) தேர்வு செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறும் என்றும், நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி அன்றும் நடைபெறும் என அறிவித்தது.