Home இந்தியா சீனா ஏன் மோடியை புகழ்கிறது? ராகுல்காந்தி கேள்வி

சீனா ஏன் மோடியை புகழ்கிறது? ராகுல்காந்தி கேள்வி

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடகமான குளோபல் டைம்ஸில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி வெளிவந்திருக்கும் செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, சீனா நமது வீரர்களை கொன்றது, சீனா நமது நிலத்தை எடுத்துகொண்டது, ஆனால் சீனா ஏன் மோடியை புகழ்கிறது என வினவியுள்ளார்.

பிரதமர் மோடி

கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலை தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமர் மோடி நிலைமையை விவரித்தார். அப்போது, இந்திய எல்லையில் யாரும் நுழையவும் இல்லை, இந்திய நிலைகளை யாரும் கைப்பற்றவும் இல்லை என மோடி கூறி இருந்தார். இதையடுத்து சீன வீரர்களுடன் மோதும் போது இந்திய வீரர்கள் ஆயுதங்கள் வைத்து இருந்தார்களா என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை சரண்டர் மோடி என விமர்சித்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி சீனாவின் ஆக்கிரமிப்புக்கு இந்திய நிலத்தை ஒப்படைத்து விட்டார் என்றும் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் இந்திய எல்லையில் யாரும் நுழையவும் இல்லை, இந்திய நிலைகளை யாரும் கைப்பற்றவும் இல்லை என பிரதமர் மோடி கூறியதை சுட்டிக்காட்டியுள்ள குளோபல் டைம்ஸ், சீனாவுடன் மேற்கொண்டு பிரச்னை செய்ய முடியாது என்பதால் மோடி அந்த மோதலை குறைத்து பேசியுள்ளார் என கூறியுள்ளது. இதுவே பாகிஸ்தானாக இருந்தால் இந்தியாவின் எதிர்வினைகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும், சீனா என்பதால் நிலைமையை அமைதிக்கு கொண்டு வர மோடி இவ்வாறு கூறியுள்ளார் என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களை சமரசம் செய்யவே, பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் என்ற அறிவிப்பை மோடி வெளியிட்டார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

பப்ஜிக்கு எதிராக களமிறங்கும் FAU-G: முன்பதிவில் சாதனை!

பப்ஜிக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகியிருக்கும் FAU-G கேமை சுமார் 40 லட்சம் கேமர்கள் Pre-registration செய்திருப்பதாக nCore Games இணை நிறுவனர் விஷால் கொண்டல் தெரிவித்திருக்கிறார்.

டாஸ்மாக்கில் ரசீது, விலைப்பட்டியல் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

தமிழக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதும், உரிய ரசீது வழங்காததும் வாடிக்கையாகி விட்டது. இதனை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ் பிரியா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு...

ஸ்டாலின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுத்து பொளந்து கட்டும் எடப்பாடி!

அதிமுக அரசுக்கு எதிராக அவதூறு பிரசாரங்களையும் பொய் குற்றச்சாட்டுகளையும் கூறி வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல்...

“இவளுக்கு மயக்கம் தெரிஞ்சதும் நம்ம மாட்டி விட்ருவாடா ..”-12 வயசு பெண்ணுக்கு பலரால் நேர்ந்த கதி .

ஒரு 12 வயதான பெண் காட்டுக்கு புல் வெட்ட சென்ற போது பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது .
Do NOT follow this link or you will be banned from the site!