சொந்த மக்கள் சாகும்போது வெளிநாட்டு ஆக்சிஜன் ஏற்றுமதி! ராகுல்காந்தி

 

சொந்த மக்கள் சாகும்போது  வெளிநாட்டு ஆக்சிஜன் ஏற்றுமதி! ராகுல்காந்தி

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை அதிவேகத்தில் பரவி வருவதால், இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இன்று ஒரே நாளில் 3 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 2023 பேர் உயிரிழந்துள்ளனர்.

சொந்த மக்கள் சாகும்போது  வெளிநாட்டு ஆக்சிஜன் ஏற்றுமதி! ராகுல்காந்தி

டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தினமும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட எண்ணிய மத்திய அரசு, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. அதே போல, ரயில் மூலமாக எல்லா மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த மருத்துவமனைக்கும் ஆக்சிஜன் சென்று சேரவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாசிக்கின் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் நோயாளிகள் இறந்த செய்தி மிகவும் துயரமானது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல். அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். கொரோனாவை கையாள்வதில் எந்த ஒரு செயல் திட்டமும் இல்லை. சொந்த மக்கள் சாகும்போது ஆக்சிஜனையும், தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது ஒரு குற்றத்திற்கு குறைவில்லாதது” எனக் குறிப்பிட்டுள்ளார்.