சீனா ஏன் மோடியை புகழ்கிறது? ராகுல்காந்தி கேள்வி

 

சீனா ஏன் மோடியை புகழ்கிறது? ராகுல்காந்தி கேள்வி

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடகமான குளோபல் டைம்ஸில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி வெளிவந்திருக்கும் செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, சீனா நமது வீரர்களை கொன்றது, சீனா நமது நிலத்தை எடுத்துகொண்டது, ஆனால் சீனா ஏன் மோடியை புகழ்கிறது என வினவியுள்ளார்.

சீனா ஏன் மோடியை புகழ்கிறது? ராகுல்காந்தி கேள்வி

கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலை தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமர் மோடி நிலைமையை விவரித்தார். அப்போது, இந்திய எல்லையில் யாரும் நுழையவும் இல்லை, இந்திய நிலைகளை யாரும் கைப்பற்றவும் இல்லை என மோடி கூறி இருந்தார். இதையடுத்து சீன வீரர்களுடன் மோதும் போது இந்திய வீரர்கள் ஆயுதங்கள் வைத்து இருந்தார்களா என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை சரண்டர் மோடி என விமர்சித்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி சீனாவின் ஆக்கிரமிப்புக்கு இந்திய நிலத்தை ஒப்படைத்து விட்டார் என்றும் குற்றஞ்சாட்டினார்.

சீனா ஏன் மோடியை புகழ்கிறது? ராகுல்காந்தி கேள்வி

இந்நிலையில் இந்திய எல்லையில் யாரும் நுழையவும் இல்லை, இந்திய நிலைகளை யாரும் கைப்பற்றவும் இல்லை என பிரதமர் மோடி கூறியதை சுட்டிக்காட்டியுள்ள குளோபல் டைம்ஸ், சீனாவுடன் மேற்கொண்டு பிரச்னை செய்ய முடியாது என்பதால் மோடி அந்த மோதலை குறைத்து பேசியுள்ளார் என கூறியுள்ளது. இதுவே பாகிஸ்தானாக இருந்தால் இந்தியாவின் எதிர்வினைகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும், சீனா என்பதால் நிலைமையை அமைதிக்கு கொண்டு வர மோடி இவ்வாறு கூறியுள்ளார் என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களை சமரசம் செய்யவே, பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் என்ற அறிவிப்பை மோடி வெளியிட்டார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.