முழு நாடும் வீழ்த்தப்படுகிறது.. நான் தள்ளப்பட்டால் பெரிய விஷயமில்லை.. போலீசார் தள்ளியது குறித்து ராகுல் காந்தி

முழு நாடும் வீழ்த்தப்படுகிறது.. நான் தள்ளப்பட்டால் பெரிய விஷயமில்லை.. போலீசார் தள்ளியது குறித்து ராகுல் காந்தி

முழு நாடும் வீழ்த்தப்படுகிறது. நான் தள்ளப்பட்டால் பெரிய விஷயமில்லை என்று போலீசார் தன்னை தள்ளியது குறித்து ராகுல் காந்தி தெரிவித்தார்.

பஞ்சாபில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில காங்கிரசார் ராகுல் காந்தி தலைமையில் விவசாயியை பாதுகாக்க பயணம் என்ற பெயரில் டிராக்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தியது. நேற்றுடன் இந்த பேரணி முடிந்தது. பாட்டியாலாவில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ராகுல் காந்தி கூறியதாவது:

முழு நாடும் வீழ்த்தப்படுகிறது.. நான் தள்ளப்பட்டால் பெரிய விஷயமில்லை.. போலீசார் தள்ளியது குறித்து ராகுல் காந்தி
போலீஸ் தள்ளியதில் கீழே விழுந்த ராகுல்

முழு நாடும் தள்ளப்படும்போது, வீழ்த்தப்படுகையில் நான் கொஞ்சம் தள்ளப்பட்டால் பெரிய விஷயமல்லை. பொதுமக்களையும், விவசாயிகளையும் பாதுகாப்பது எங்கள் வேலை. இது போன்ற அரசாங்கத்துக்கு எதிரான நின்றால் நீங்கள் தள்ளப்படுவீர்கள், நீங்கள் லத்தியால் தாக்கப்படுவீர்கள். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். உண்மையான உந்துதல் கற்பனை செய்ய முடியாத ஒன்று, அது குடும்பத்துக்கு (ஹத்ராஸ் பாதிக்கப்பட்டவரின்) வழங்கப்பட்டது.

முழு நாடும் வீழ்த்தப்படுகிறது.. நான் தள்ளப்பட்டால் பெரிய விஷயமில்லை.. போலீசார் தள்ளியது குறித்து ராகுல் காந்தி
டிராக்டர் பேரணியில் ராகுல்

அதனால்தான் அவர்களை சந்திக்க விரும்பினேன். அவர்கள் தனியாக இல்லை என்பதை அந்த குடும்பம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். தினந்தோறும் தவறாக நடத்தப்படும் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் லட்சக்கணக்கான பெண்களுக்காக நான் அங்கு இருந்தேன் என நான் அவர்களிடம் சொன்னேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். ராகுல் காந்தியும், அவரது சகோதரியும் கடந்த வாரம் ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார் தள்ளியதில் ராகுல் காந்தி கீழே விழுந்தார்.