பணவீக்கம், பெகாசஸ் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து நாங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை.. ராகுல் காந்தி

பணவீக்கம், பெகாசஸ் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து நாங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை.. ராகுல் காந்தி

பணவீக்கம், பெகாசஸ் (உளவு விவகாரம்) மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து நாங்கள் (எதிர்க்கட்சிகள்) சமரசம் செய்ய விரும்பவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல பிரச்சினைகள் குறித்து எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசிக்க மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, சி.பி.ஐ. (எம்) மற்றும் தேசிய மாநாடு உள்பட மொத்தம் 14 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பணவீக்கம், பெகாசஸ் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து நாங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை.. ராகுல் காந்தி
மல்லிகார்ஜூன் கார்கே

அந்த கூட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், குடிமக்கள், விவசாயிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை நாம் எழுப்புகையில், நாம் நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதிக்கவில்லை என்று அரசாங்கம் எதிர்கட்சிகளை அவதூறு செய்கிறது என்று தெரிவித்தார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்ததாக தகவல்.

பணவீக்கம், பெகாசஸ் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து நாங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை.. ராகுல் காந்தி
பணவீக்கம்

அந்த கூட்டத்துக்கு பிறகு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், பணவீக்கம், பெகாசஸ் (உளவு விவகாரம்) மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து நாங்கள் (எதிர்க்கட்சிகள்) சமரசம் செய்ய விரும்பவில்லை. அவையில் விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.