மோடி சொன்னப்படி 21 நாளில் போரில் வெற்றி பெறமுடியவில்லை… ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மோடி சொன்னப்படி 21 நாளில் போரில் வெற்றி பெறமுடியவில்லை… ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் சொன்னப்படி, கொரோனா வைரஸ் போரில் 21 நாட்களில் வெற்றி பெறமுடியவில்லை என்று மோடியை ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

உலகத்தையே புரட்டி போட்ட தொற்றுநோயான கொரோனா வைரஸ் நம் நாட்டில் கடந்த ஜனவரியில் இறுதி பரவ தொடங்கியது. கடந்த மார்ச் மாதத்தின் அதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் பிரதமர் மோடி நாடு தழுவிய லாக்டவுனை அறிவித்தார். லாக்டவுன் தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி அறிவிக்கும்போது, அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்த 21 நாட்களும் முக்கியமானது என்று தெரிவித்து இருந்தார்.

மோடி சொன்னப்படி 21 நாளில் போரில் வெற்றி பெறமுடியவில்லை… ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ராகுல் காந்தி

நம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டிவிட்டது. மேலும் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1.45 லட்சத்தை தாண்டி விட்டது. இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியின் லாக்டவுன் முடிவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

மோடி சொன்னப்படி 21 நாளில் போரில் வெற்றி பெறமுடியவில்லை… ராகுல் காந்தி குற்றச்சாட்டு
லாக்டவுன்

இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், சுமார் 1.5 லட்சம் உயிர் இறப்புகளுடன் 1 கோடி கோவிட் தொற்று. பிரதமர் மோடி கூறியது போல் திட்டமிடப்படாத பூட்டுதலால் 21 நாட்களில் போரில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் அது (திட்டமிடப்படாத லாக்டவுன்) நிச்சயமாக நாட்டில் மில்லியன் கணக்கான உயிர்களை அழித்தது என்று பதிவு செய்து இருந்தார்.