மோடி அரசாங்கத்தின் ஆணவம் 60க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரை பறித்தது… ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மோடி அரசாங்கத்தின் ஆணவம் 60க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரை பறித்தது… ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மோடி அரசாங்கத்தின் அக்கறையின்மை மற்றும் ஆணவம் காரணமாக 60க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரை பறித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிருக்கும் மத்தியில் போராட்டத்தை அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் உடல் நலக்குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் இதுவரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகி உள்ளனர். இதனை குறிப்பிட்டு மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

மோடி அரசாங்கத்தின் ஆணவம் 60க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரை பறித்தது… ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ராகுல் காந்தி

ராகுல் காந்தி டிவிட்டரில், மோடி அரசாங்கத்தின் அக்கறையின்மையும், ஆணவமும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரை பறித்தன. அவர்களின் (விவசாயிகள்) கண்ணீரைத் துடைப்பதற்கு பதில், மத்திய அரசு கண்ணீர் புகை குண்டுகளால் அவர்களை தாக்குவதில் பிசியாக உள்ளது. இத்தகைய மிருகத்தனம், முதலாளிகளின் வணிக நலன்களை மேம்படுத்துதற்காக மட்டுமே. வேளாண் சட்டங்களை ரத்து செய்யுங்க என்று பதிவு செய்து இருந்தார்.

மோடி அரசாங்கத்தின் ஆணவம் 60க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரை பறித்தது… ராகுல் காந்தி குற்றச்சாட்டு
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர், அதேசமயம் மத்திய அரசோ வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய தயார், ஆனால் சட்டங்களை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக உள்ளது. இதனால் இதுவரை விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற 7 சுற்றுப்பேச்சுவார்த்தைகளில் முடிவு கிடைக்கவில்லை. வரும் 8ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.