நிதிஷ், மோடிக்கு வாக்களித்ததுதான் நீங்கள் செய்த தவறு.. அதனை சரிசெய்ய வேண்டிய நேரம் இது…. ராகுல் காந்தி

நிதிஷ், மோடிக்கு வாக்களித்ததுதான் நீங்கள் செய்த தவறு.. அதனை சரிசெய்ய வேண்டிய நேரம் இது…. ராகுல் காந்தி

நிதிஷ், மோடிக்கு வாக்களித்ததுதான் நீங்கள் செய்த தவறு. அதனை செரிசெய்ய வேண்டிய நேரம் இது என்று பீகார் வாக்காளர்களிடம் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

பீகார் மாநிலம் கதிஹாரில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: கொரோனா காலத்தில், மும்பை, பஞ்சாப், ஹரியானா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலிருந்து உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் லட்சக்கணக்கான பீகாரை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வாறு மாநிலத்துக்கு நடந்து வந்தார்கள் என்பதை நினைவுப்படுத்தி பாருங்கள். அவர்களுக்கு உதவி செய்யுங்கள், உணவு மற்றும் தண்ணீர் கொடுங்க என்று நரேந்திர மோடியிடம் கூறினேன்.

நிதிஷ், மோடிக்கு வாக்களித்ததுதான் நீங்கள் செய்த தவறு.. அதனை சரிசெய்ய வேண்டிய நேரம் இது…. ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஆனால் அவை கொடுக்கப்படவில்லை. தொழிலாளர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல காங்கிரஸ் பஸ் வழங்கியது. நாங்கள் ஆட்சியில் இல்லாததால் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு உதவ முடியவில்லை. ஆனால் எங்களால் முடிந்தவர்களுக்கு உதவினோம். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களது வீடுகளுக்கு செல்ல அரசு போக்குவரத்து இல்லை. மோடிஜி அவர்களுக்கு உதவவில்லை. நீங்கள் உதவி கேட்டபிறகும், மோடிஜியும், நிதிஷ்ஜியும் உதவில்லை.

நிதிஷ், மோடிக்கு வாக்களித்ததுதான் நீங்கள் செய்த தவறு.. அதனை சரிசெய்ய வேண்டிய நேரம் இது…. ராகுல் காந்தி
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

இன்று அவர்கள் உங்களிடம் ஓட்டு கேட்கிறார்கள். உங்களுக்கு தேவைப்படும்போது அவர்கள் எங்கு இருந்தார்கள். பீகாரில் விவசாய அடிப்படை வசதிகள் மேம்படுத்தவில்லை விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு உரிய விலை பெறவில்லை. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஸ்கரில் விவசாயிகள் நெல்லுக்கு ரூ.2,500 (குவிண்டாலுக்கு) பெறுகின்றனர். ஆனால் பீகாரில் ரூ.700 மட்டுமே பெறுகின்றனர். நீங்க என்ன தவறு செய்தீர்கள்? நிதிஷ்ஜி மற்றும் மோடிஜிக்கு வாக்களித்தீர்கள். தற்போது அந்த தவறை சரிசெய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.