மகாராஷ்டிரா அரசுக்கு ஆதரவு மட்டும்தான் – ராகுல் காந்தி…. சிவ சேனாவுடன் நெருங்க விரும்பாத காங்கிரஸ்

நம் நாட்டில் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அம்மாநிலத்தில் சுமார் 53 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் நெருக்கடியை முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசு தவறாக கையாளுவதாக எதிர்கட்சியான பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கலைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சரத் பவார்

இந்நிலையில் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அம்மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சரத் பவார்-கவர்னர் சந்திப்பு தொடர்பான அனைத்து யூகங்களையும் சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் நிராகரித்தார். மேலும் மகா விகாஸ் கூட்டணி அரசு வலுவாக உள்ளதாக இன்று காலையில் தெரிவித்து இருந்தார்.

முதல்வர் உத்தவ் தாக்கரே

தற்போது ராகுல் காந்தி வாயிலாக கூட்டணிக்கு சிக்கல் எழுந்துள்ளது. மகாராஷ்டிராவை ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணியின் ஒரு பகுதியாகும், முக்கிய அமைச்சக பதவிகளையும் காங்கிரஸ் தன் வசம் வைத்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேட்டி ஒன்றில், மகாராஷ்டிரா அரசை ஆதரிக்க மட்டுமே செய்கிறோம். ஆட்சியை நடத்துவதில் முக்கிய பங்காற்றவில்லை. காங்கிரஸ் கட்சி தனது சொந்த அரசாங்கத்தை நடத்தும் இடத்தில் சிறப்பாக செயல்படுகிறது என தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு முதல்வர் உத்தவ் தாக்கரே ஆட்சியை குறை கூறுவது போலவும், சிவ சேனாவுடான உறவு சுமூகமாக இல்லை என்பதையும் வெளிப்படுத்துகிறது. மேலும், சிவசேனாவுடன் காங்கிரஸ் நெருங்க விரும்பவில்லை என்பது போல்தான் தெரிகிறது. மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசுதான் நடைபெற்று வருகிறது.

Most Popular

நேரில் வாம்மா… பேசிக்கலாம் என்ற ஆடியோ புகழ் அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுகவை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை- ஆர்.எஸ்.பாரதி

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “நில அபகரிப்பு திமுக ஆட்சிக் காலத்தில் அதிகம் இருந்தது. துப்பாக்கிக் கலாச்சாரமும் தற்போது திமுகவில் தலைதூக்கிவிட்டது. சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது. ஆட்சியில்...

அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை, தரமான உணவு- நடிகர் விவேக்

அரசு மருத்துவமனை சிகிச்சை சிறந்த முறையில் உள்ளது என பாராட்டி நடிகர் விவேக் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். நம் நாட்டில் கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலுள்ளது. இங்கு...

திருச்சி மாநகர தி.மு.க செயலாளர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,328பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. சாதாரண மக்கள் முதல் அரசியல்...

கேரளாவில் இன்று ஒரே நாளில் 449பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 8,322 ஆக உயர்வு!!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூலை 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...
Open

ttn

Close