மோடியின் ஆட்சியில் தேசிய எல்லை மட்டுமல்ல மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மோடியின் ஆட்சியில் தேசிய எல்லை மட்டுமல்ல மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசின் ஆட்சியில், தேசிய எல்லை மட்டுமல்ல மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

சுமார் 70 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிங்களான அசாம் , மிசோரம் இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. அண்டை மாநிலங்களான அசாமும், மிசோரமும் சுமார் 155 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து வருகின்றன. இதில் சர்ச்சை நீடிப்பதால் கடந்த 1995ம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால் இன்னும் தீர்வு கிடைத்த மாதிரி இல்லை.

மோடியின் ஆட்சியில் தேசிய எல்லை மட்டுமல்ல மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பாதுகாப்பு பணியில் வீரர்கள்

இந்த சூழ்நிலையில், கடந்த 26ம் தேதியன்று மிசோரம் மாநில நிர்வாகம் 6.5 கிலோ மீட்டர் பகுதி இடத்தை ஆக்கிரமித்ததாக தகவல் கேள்விப்பட்டு அந்த பகுதிக்கு அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்ட அதிகாரிகள் எல்லைக்கு வந்துள்ளனர். இதற்கு மிசோரம் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வன்முறை ஏற்பட்டது. இதில் 6 அசாம் காவல் துறையினர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டனர். மேலும் 50க்கும மேற்பட்டோர் இரு தரப்பிலும் காயமடைந்தனர். இதனால் அசாம், மிசோரம் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

மோடியின் ஆட்சியில் தேசிய எல்லை மட்டுமல்ல மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ராகுல் காந்தி

அசாம்-மிசோரம் எல்லை பிரச்சினையை குறிப்பிட்டு, மோடி தலைமையிலான தற்போதைய ஆட்சியின்கீழ், தேசிய எல்லை அல்லது மாநில எல்லையும் பாதுகாப்பாக இல்லை என்று மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், தேசிய எல்லை மட்டுமல்ல மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை. சர்ச்சைகள் மற்றும் கலவரங்கள் நம் நாட்டின் புனித பூமியில் விதை போல் விதைக்கப்படுகின்றன. விளைவுகள் மோசமாக இருக்கும். மிசோரம்அசாம், உண்மையான எல்லை கட்டுப்பாடு என்று பதிவு செய்து இருந்தார்.