மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத சோதனைகளின் விளைவுதான் வேலையின்மை தொற்றுநோய்.. ராகுல் காந்தி

மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத சோதனைகளின் விளைவுதான் வேலையின்மை தொற்றுநோய்.. ராகுல் காந்தி

கொரோனா வைரஸால் அல்ல மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத சோதனைகளின் விளைவுதான் வேலையின்மை தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி மாலை 6 மணி முதல் நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தினார். இந்த லாக்டவுனால் கொரோனா வைரஸ் பரவல் ஒரளவுக்கு கட்டுக்குள் வந்தாலும் பல கோடி பேர் வேலையை இழந்தனர், பொருளாதாரத்தில் பெரிய பின்னடைவு போன்றவை ஏற்பட்டது.

மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத சோதனைகளின் விளைவுதான் வேலையின்மை தொற்றுநோய்.. ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தற்போது பொருளாதாரம் வளர்ச்சிக்கு பாதைக்கு திரும்ப தொடங்கியுள்ளபோதிலும், வேலையின்மை கடுமையாக உள்ளது. பல கோடி இளைஞர்கள் சரியான வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். நாட்டில் நிலவும் வேலையின்மைக்கு மோடி அரசாங்கம்தான் காரணம் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் டிவிட்டரில், மோடி அரசாங்கத்தின் மக்களுக்கு எதிரான சோதனைகளின் விளைவுதான் வேலையின்மை தொற்றுநோய், கொரோனா வைரஸால் ஏற்படவில்லை. வேலைவாய்ப்பு ஒரு உரிமை. அரசாங்கம் அதனை வழங்க தவறி விட்டது என்று பதிவு செய்து இருந்தார்.

மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத சோதனைகளின் விளைவுதான் வேலையின்மை தொற்றுநோய்.. ராகுல் காந்தி
ஆர்.எஸ்.எஸ்.

ராகுல் காந்தி நேற்று முன்னதாக மற்றொரு டிவிட்டில், சங்க பரிவார் அமைப்பை தாக்கி பதிவு செய்து இருந்தார். அதில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் தொடர்புடைய அமைப்பை சங்க் பரிவார் என்று அழைப்பது சரியல்ல என்ற நான் நம்புகிறேன். குடும்பத்தில் பெண்கள் உள்ளனர், வயதானவர்களுக்கு மரியாதை, இரக்கம் மற்றும் பாச உணர்வு உண்டு. இது ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை. இனி ஆர்.எஸ்.எஸை சங்க் பரிவார் என்று அழைக்க மாட்டேன் என்று பதிவு செய்து இருந்தார்.