விவசாயிகளின் போராட்டமும், தியாகமும் நிச்சயமாக பலனை தரும்… ராகுல் காந்தி

 

விவசாயிகளின் போராட்டமும், தியாகமும் நிச்சயமாக பலனை தரும்… ராகுல் காந்தி

விவசாயிகளின் போராட்டமும், தியாகமும் நிச்சயமாக பலனை தரும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

டெல்லியின் பல எல்லைகளில், மத்திய அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல வாரங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது பல்வேறு காரணங்களால் சுமார் 33 விவசாயிகள் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. மறைந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று ஷாஹீத் திவாஸ் (தியாகி விளக்கு) நாளாக கடைப்பிடித்தனர்.

விவசாயிகளின் போராட்டமும், தியாகமும் நிச்சயமாக பலனை தரும்… ராகுல் காந்தி
விவசாயிகள் போராட்டம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் விவசாயிகளின் போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், விவசாயிகளின் போராட்டமும் தியாமும் நிச்சயமாக பலனை தரும். விவசாய சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் மற்றும் அஞ்சலி என்று பதிவு செய்து இருந்தார். மேலும் இறந்த விவசாயிகளின் படத்தையும் பதிவேற்றம் செய்து இருந்தார்.

விவசாயிகளின் போராட்டமும், தியாகமும் நிச்சயமாக பலனை தரும்… ராகுல் காந்தி
விவசாயிகளில் போராட்டத்தில் உயிர் இறந்தவர்கள்

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால் சட்டங்களை திரும்ப பெற முடியாது, திருத்தங்கள் வேண்டுமானால் செய்ய தயார் என்று மத்திய அரசு கூறுகிறது. இதனால் விவசாயிகள் போராட்டம் முடியாமல் இழுத்து கொண்டே செல்கிறது. கடும் குளிரிலும் விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.