பொதுமக்கள் விலைவாசி அதிகரிப்பால் அவதி.. ஆனால் வரி வசூலில் மோடி அரசு பிஸி… ராகுல் காந்தி தாக்கு

பொதுமக்கள் விலைவாசி அதிகரிப்பால் அவதி.. ஆனால் வரி வசூலில் மோடி அரசு பிஸி… ராகுல் காந்தி தாக்கு

பொதுமக்கள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மோடி அரசு வரி வசூலில் பிஸியாக உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 4 தினங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் மும்பையில் ரூ.92.28க்கும், டெல்லியில் ரூ.85.70க்கும் விற்பனையானது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை குறிப்பிட்டு ராகுல் காந்தி மத்திய அரசை கிண்டலாக தாக்கியுள்ளார்.

பொதுமக்கள் விலைவாசி அதிகரிப்பால் அவதி.. ஆனால் வரி வசூலில் மோடி அரசு பிஸி… ராகுல் காந்தி தாக்கு
பிரதமர் மோடி

இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், மோடி ஜி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய வளர்ச்சியை காட்டியுள்ளார். உதாரணமாக கியாஸ்-டீசல்-பெட்ரோல் விலைகள்! பொதுமக்கள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், மோடி அரசு வரி வசூலில் பிஸியாக உள்ளது என்று பதிவு செய்து இருந்தார். அதேசமயம், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்ததுதான் காரணம் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார்.

பொதுமக்கள் விலைவாசி அதிகரிப்பால் அவதி.. ஆனால் வரி வசூலில் மோடி அரசு பிஸி… ராகுல் காந்தி தாக்கு

தர்மேந்திர பிரதான் இது தொடர்பாக கூறுகையில், நம் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்கிறோம். கொரோனா வைரஸ் காரணமாக பல கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை நிறுத்தி விட்டன அல்லது உற்பத்தியை குறைத்து விட்டன. தேவை மற்றும் சப்ளையில் ஏற்றத்தாழ்வு காரணமாக எரிபொருள் விலையில் அழுத்தம் (உயர்வு) உள்ளது என்று தெரிவித்தார்.