போலி செய்திகளை பரப்புவதில் பேஸ்புக்கின் ஈடுபாட்டை இந்தியர்கள் கேள்வி கேட்க வேண்டும்… ராகுல் காந்தி

போலி செய்திகளை பரப்புவதில் பேஸ்புக்கின் ஈடுபாட்டை இந்தியர்கள் கேள்வி கேட்க வேண்டும்… ராகுல் காந்தி

பொருளதாரம், லடாக் மோதல், கொரோனா வைரஸ் கையாளுதல் போன்ற விவகாரங்களில், பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தற்போது பேஸ்புக்கின் பா.ஜ.க. ஆதரவு நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை தீவிரமாக கேள்விகள் எழுப்பி வருகிறார்.

போலி செய்திகளை பரப்புவதில் பேஸ்புக்கின் ஈடுபாட்டை இந்தியர்கள் கேள்வி கேட்க வேண்டும்… ராகுல் காந்தி

ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், சார்பு, போலி செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் மூலம் நாம் கடினமாக சம்பாதித்த ஜனநாயகத்தில் எந்தவொரு மோசடி செய்யவும் நாம் அனுமதிக்க முடியாது. வால் ஸ்ட்ரீட் ஜெனரல் (பத்திரிகை) வெளிப்படுத்திய, போலி மற்றும் வெறுப்பு பேச்சுக்களை பரப்புவதில் பேஸ்புக்கின் ஈடுபாட்டை அனைத்து இந்தியர்களும் கேள்வி கேட்க வேண்டும் என பதிவு செய்து செய்து இருந்தார். மேலும், காங்கிரஸ் கட்சி பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு எழுதிய கடிதத்தையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார்.

போலி செய்திகளை பரப்புவதில் பேஸ்புக்கின் ஈடுபாட்டை இந்தியர்கள் கேள்வி கேட்க வேண்டும்… ராகுல் காந்தி

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன், ராகுல் காந்தி டிவிட்டரில், இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகின்றன. அவர்கள் அதன் மூலம் போலி செய்திகளையும், வெறுப்பையும் பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த பயன்படுத்துகிறார்கள். இறுதியாக அமெரிக்க ஊடகங்கள் பேஸ்புக் பற்றிய உண்மையை வெளிப்படுத்தியுள்ளன என பதிவு செய்து இருந்தார். மேலும் அதனுடன், அமெரிக்க பத்திரிகையில் பேஸ்புக் தொடர்பான வெளியான செய்தியையும் பதிவேற்றம் செய்து இருந்தார்.