’பொருளாதாரம் அழிந்தது இந்த மூன்று காரணங்களால்தான்’ ராகுல் காந்தி

 

’பொருளாதாரம் அழிந்தது இந்த மூன்று காரணங்களால்தான்’ ராகுல் காந்தி

இந்திய பொருளாதாரம் பெரும் அபாய காலத்தில் உள்ளது என்றே பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அதற்கு ஆளும் பாஜக அரசுத் தரப்பில் சில காரணங்களும் எதிர்கட்சிகள் தரப்பில் வேறு விதமான காரணங்களைச் சொல்கின்றனர்.

மத்திய நிதிமையச்சர் நிர்மலா சீதாராமன், 2.35 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் கொரோனா நோய்த் தொற்று. அதனால் இந்த வருடம் கடுமையான நெருக்கடியைச் சந்திக்கிறோம்’ என்று கூறியிருந்தார்.

’பொருளாதாரம் அழிந்தது இந்த மூன்று காரணங்களால்தான்’ ராகுல் காந்தி

ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பு நேரத்தில் மாநில அரசுகள் கூடுதல் நிதி கேட்பது குறித்தும் விரிவாகப் பேசியிருந்தார் நிதியமைச்சர்.

அவரின் கருத்துகளை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். கொரொனாவுக்கு முன் உள்ள நிதி நிலைமை பற்றி கேள்வி எழுப்பியிருந்தார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பம்.

’பொருளாதாரம் அழிந்தது இந்த மூன்று காரணங்களால்தான்’ ராகுல் காந்தி

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியப் பொருளாதாரம் அழிய மூன்று காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

  1. பணமதிப்பு நீக்க நடவடிக்கை
  2. ஜிஎஸ்டி பின்பற்றிய விதம்
  3. தோல்வியடைந்த லாக்டெளன்

    இந்த மூன்றையும் தவிர வேறு எது சொன்னாலும் அது பொய்தான் என்று பதிவிட்டுள்ளார்.

நிதியமைச்சரின் விளக்கமான உரையை குறித்து ஒரு ஆர்ட்டிகிளைப் பகிர்ந்துகொண்டு இந்த காரணங்களைப் பட்டியிலிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தியின் ட்விட் பலராலும் ஷேர் செய்யப்பட்டு விவாதம் செய்யப்படுகிறது.