விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி விரும்புகிறார்.. வேளாண் மசோதாக்கள் குறித்து ராகுல் காந்தி

விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி விரும்புகிறார்.. வேளாண் மசோதாக்கள் குறித்து ராகுல் காந்தி

விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி விரும்புகிறார் என வேளாண் மசோதாக்கள் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட வேளாண் தொடர்பான 3 மசோதாக்களும் நேற்று மாநிலங்களவையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் தாக்கல் செய்தார். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மத்தியில் அந்த மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. வேளாண் தொடர்பான மசோதாக்கள் தாக்கல் காரணமாக நேற்று மாநிலங்களவை மிகவும் பரபரப்பாக இருந்தது.

விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி விரும்புகிறார்.. வேளாண் மசோதாக்கள் குறித்து ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று டிவிட்டரில், மோடி அரசாங்கத்தின் வேளாண் எதிர்ப்பு கருப்பு சட்டத்தின் மூலம், விவசாயிகள்: 1. ஏ.பி.எம்.சி./விவசாயி சந்தையின் முடிவில் குறைந்தபட்ச ஆதரவு விலை பெறப்படும்? 2. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஏன் உத்தரவாதம் இல்லை? மோடி ஜி விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக ஆக்குகிறார்.இதனை நாடு ஒருபோதும் வெற்றிபெற அனுமதிக்காது என பதிவு செய்து இருந்தார்.

விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி விரும்புகிறார்.. வேளாண் மசோதாக்கள் குறித்து ராகுல் காந்தி
சோனியா, ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வாரம் அமெரிக்காவுக்கு கிளம்பி சென்றார். அவருடன் ராகுல் காந்தியும் சென்றார். ராகுல் காந்தி மட்டும் முதலில் ஒரு வாரத்தில் திரும்பி வந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மழைக்கால கூட்டத்தொடர் அமர்வு குறைக்கப்பட்டு வரும் புதன்கிழமை முடிவுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளதால், ராகுல் காந்தி தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிகிறது.