தொற்றுநோயை தோற்கடிக்க எந்த திட்டமும் இல்லை.. கொரோனாவிடம் சரண் அடைந்த மோடி.. ராகுல் காந்தி தாக்கு

தொற்றுநோயை தோற்கடிக்க எந்த திட்டமும் இல்லை.. கொரோனாவிடம் சரண் அடைந்த மோடி.. ராகுல் காந்தி தாக்கு

தொற்று நோயான கொரோனா வைரஸ் நம் நாட்டில் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி விட்டது. குறிப்பாக கடந்த 6 நாட்களில் மட்டும் புதிதாக ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ராகுல் காந்தி மீண்டும் கடுமையாக டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

தொற்றுநோயை தோற்கடிக்க எந்த திட்டமும் இல்லை.. கொரோனாவிடம் சரண் அடைந்த மோடி.. ராகுல் காந்தி தாக்கு

ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், நாட்டின் புதிய பகுதிகளில் கோவிட்-19 வேகமாக பரவி வருகிறது. அதனை தோற்கடிக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. பிரதமர் அமைதியாக இருக்கிறார். தொற்றுநோயை எதிர்த்து சண்டையிட மறுத்து அவர் சரண் அடைந்து விட்டார் என பதிவு செய்து இருந்தார். மேலும் அதனுடன் பிரிண்ட் வெப்சைட்டில் வெளியான ஒரு செய்தியையும் பதிவேற்றம் செய்து இருந்தார்.

தொற்றுநோயை தோற்கடிக்க எந்த திட்டமும் இல்லை.. கொரோனாவிடம் சரண் அடைந்த மோடி.. ராகுல் காந்தி தாக்கு

பிரிண்ட் வெப்சைட்டில் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அரசு அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த 2 வாரங்களாக கொரோனா வைரஸ் தொடர்பான சந்திப்பை நடத்தவில்லை. கடந்த 9ம் தேதியன்று மத்திய சுகாதாரா துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு சந்தித்து பேசியது. ஐ.சி.எம்.ஆர். சந்திப்பு நடந்தும் 2 வாரங்களுக்கும் மேலாகி விட்டது என தெரிவித்து இருந்தது.