உண்மையிலிருந்து விலகி செல்வது எப்படி என்பதை இந்தியாவுக்கு கற்பிக்கிறார்.. மோடியை தாக்கிய ராகுல் காந்தி

உண்மையிலிருந்து விலகி செல்வது எப்படி என்பதை இந்தியாவுக்கு கற்பிக்கிறார்.. மோடியை தாக்கிய ராகுல் காந்தி

உண்மையிலிருந்து விலகி செல்வது எப்படி என்பதை இந்தியாவுக்கு கற்பிக்கிறார் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி தாக்கியுள்ளார்.

பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் நம் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தற்போது லாக்டவுனும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டதால் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளன. பிரதமர் மோடியும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

உண்மையிலிருந்து விலகி செல்வது எப்படி என்பதை இந்தியாவுக்கு கற்பிக்கிறார்.. மோடியை தாக்கிய ராகுல் காந்தி
பிரதமர் மோடி

இந்த சூழ்நிலையில், நம் நாடு இழந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை மீண்டும் பெற சில ஆண்டுகள் ஆகலாம் என இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கமிட்டியின் முக்கிய துளிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இதனை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

உண்மையிலிருந்து விலகி செல்வது எப்படி என்பதை இந்தியாவுக்கு கற்பிக்கிறார்.. மோடியை தாக்கிய ராகுல் காந்தி
இந்திய ரிசர்வ் வங்கி

இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், உண்மையிலிருந்து விலகி செல்வது எப்படி என்பதை பிரதமர் இந்தியாவுக்கு கற்பிக்கிறார். இதன் விளைவாக பல மில்லியன்கள் (பத்து லட்சங்கள்) மக்கள் தங்களது கண்ணியம் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர் என பதிவு செய்து இருந்தார்.