சுதந்திரத்துக்கு பிறகு ஜி.டி.பி.-ல் பெரிய வீழ்ச்சி.. ஒரே வரியில் மோடி அரசை கலாய்த்த ராகுல் காந்தி

சுதந்திரத்துக்கு பிறகு ஜி.டி.பி.-ல் பெரிய வீழ்ச்சி.. ஒரே வரியில் மோடி அரசை கலாய்த்த ராகுல் காந்தி

நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1947ம் ஆண்டுக்கு பிறகு இந்த நிதியாண்டில் மிக குறைந்த வளர்ச்சியை எட்டக்கூடும் என இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான என்.ஆர். நாராயண மூர்த்தி கருத்து தெரிவித்து இருந்தார். நாராயண மூர்த்தியின் கருத்தை மேற்கோள் காட்டி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

சுதந்திரத்துக்கு பிறகு ஜி.டி.பி.-ல் பெரிய வீழ்ச்சி.. ஒரே வரியில் மோடி அரசை கலாய்த்த ராகுல் காந்தி

ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், ‘மோடி இருந்தால் இது சாத்தியமாகும்’ என பதிவு செய்து இருந்தார். அதனுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) குறித்து இன்போசிஸ் நாராயண மூர்த்தி கூறியது தொடர்பான வெளியான செய்தியையும் பதிவேற்றம் செய்து இருந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, மோடி இருந்தால் அது சாத்தியமாகும் என்ற வாசகத்தை பா.ஜ.க. முன்னிலைப்படுத்தியது. தற்போது ராகுல் காந்தி அதே வாசகத்தை பயன்படுத்தி மோடி இருந்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் வீழ்ச்சி காணுவது சாத்தியமாகும் என மத்திய அரசை கிண்டல் செய்துள்ளார்.

சுதந்திரத்துக்கு பிறகு ஜி.டி.பி.-ல் பெரிய வீழ்ச்சி.. ஒரே வரியில் மோடி அரசை கலாய்த்த ராகுல் காந்தி

கடந்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ், இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் மற்றும் முழு நிதியாண்டிலும் வீழ்ச்சி காணும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. எல்லையில் சீன மோதல், பொருளாதார அழுத்தம், கோவிட்-19 கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடியையும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசையையும் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.