கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. 2 பேருக்காக பொதுமக்களிடம் கொள்ளை.. மோடியை தாக்கிய ராகுல் காந்தி..

கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. 2 பேருக்காக பொதுமக்களிடம் கொள்ளை.. மோடியை தாக்கிய ராகுல் காந்தி..

கியாஸ், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை குறிப்பிட்டு, 2 பேரின் வளர்ச்சிக்காக பொது மக்களிடம் கொள்ளையடிப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் 1 லிட்டர் பெட்ரோல்(பிரீமியம்) விலை ரூ.100ஐ தொட்டு விட்டது. மேலும் இந்த மாதத்தில் சமையல் கியாஸ் விலை இந்த மாதத்தில் மட்டும் ரூ.75 (முதல்ல ரூ.25, அப்புறம் ரூ.50) உயர்த்தப்பட்டது. எரிபொருட்கள் விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. 2 பேருக்காக பொதுமக்களிடம் கொள்ளை.. மோடியை தாக்கிய ராகுல் காந்தி..
ராகுல் காந்தி

எரிபொருட்கள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். ராகுல் காந்தி டிவிட்டரில், மோடி அரசு உறுதியாக உள்ளது, பொதுமக்களிடம் கொள்ளை, 2 பேரை (நட்பு தொழிலதிபர்கள்) உருவாக்குவதற்காக.. எரிபொருள் கொள்ளை என்று பதிவு செய்து இருந்தார்.

கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. 2 பேருக்காக பொதுமக்களிடம் கொள்ளை.. மோடியை தாக்கிய ராகுல் காந்தி..
பிரதமர் மோடி

ராகுல் காந்தி முன்னதாக மற்றொரு டிவிட்டில், 2019 பிப்ரவரி 14ம் தேதியன்று, பிரதமர் முக்கியமான உளவுத்துறை தகவல்களை புறக்கணித்து, நமது வீரர்களை புல்வாமாவில் இறக்க விட்டுவிட்டு ஒரு படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்தார். செயல்படக்கூடிய உளவுத்துறை தகவல்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டது? என்று பதிவு செய்து இருந்தார். புல்வாமா தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே மத்திய அரசுக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்ததாக வெளியான செய்தியையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார்.