வெட்கக்கேடான உண்மை.. தலித், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களை பலரும் மனிதர்களாக கருதவில்லை.. ராகுல் காந்தி

வெட்கக்கேடான உண்மை.. தலித், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களை பலரும் மனிதர்களாக கருதவில்லை.. ராகுல் காந்தி

தலித், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களை பல இந்தியர்கள் மனிதர்களாக கருதவில்லை. அது வெட்கக்கேடான உண்மை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, பின் மருத்துவமனையில் இறந்து போன 19 வயது தலித் பெண் விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அம்மாநில காவல் துறையை ராகுல் காந்தி தாக்கியுள்ளார்.

வெட்கக்கேடான உண்மை.. தலித், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களை பலரும் மனிதர்களாக கருதவில்லை.. ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தி டிவிட்டரில், தலித்துக்கள், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களை பல இந்தியர்கள் மனிதர்களாக கருதவில்லை. அது வெட்கக்கேடான உண்மை. அவர்களுக்காக, முதல்வரும், அவரது காவல் துறையும் யாரும் அவளை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று சொல்கிறது. பல இந்தியர்களுக்கு, அவள் யாரும் (ஒரு பொருட்டு) இல்லை என பதிவு செய்து இருந்தார்.

வெட்கக்கேடான உண்மை.. தலித், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களை பலரும் மனிதர்களாக கருதவில்லை.. ராகுல் காந்தி
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

மேலும் ராகுல் காந்தி அந்த டிவிட்டரில், ஹத்ராஸ் பாலியல் சம்பவம் தொடர்பாக பிபிசி. வெளியிட்டு இருந்த செய்தியையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார். ஹத்ராஸ் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து சி.பி.ஐ. நேற்று ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளதாக தகவல்.