எரிபொருள், ரயில் கட்டணம் அதிகரிப்பு.. தவறான வாக்குறுதிகளின் மாயை உடைந்து விட்டது.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

எரிபொருள், ரயில் கட்டணம் அதிகரிப்பு.. தவறான வாக்குறுதிகளின் மாயை உடைந்து விட்டது.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

எரிபொருள், ரயில் கட்டணம் உயர்வை குறிப்பிட்டு, தவறான வாக்குறுதிகளின் மாயையை கொள்ளை உடைத்து விட்டது என்று மத்திய அரசை ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி டிவிட்டரில், பயணிகள் ரயில் கட்டணம் இரட்டிப்பாகும் என்று செய்தித்தாளில் வெளியான கட்டுரையை பதிவேற்றம் செய்து இருந்தார். மேலும், கோவிட் உங்களுக்கு (மக்களுக்கு) பேரழிவு, அரசாங்கத்துக்கு வாய்ப்பு. பெட்ரோல்-டீசல்-கியாஸ்-ரயில் கட்டணம், நடுத்தர வர்த்தகம் மோசமாக சிக்கியுள்ளது. கொள்ளை, தவறான வாக்குறுதிகளின் (ஜூம்லாஸ்) மாயையை உடைத்து விட்டது என்று பதிவு செய்து இருந்தது.

எரிபொருள், ரயில் கட்டணம் அதிகரிப்பு.. தவறான வாக்குறுதிகளின் மாயை உடைந்து விட்டது.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ராகுல் காந்தி

ராகுல் காந்தி கொள்ளை என்று குறிப்பிடுவது, பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு அதிகளவில் வரி விதிப்பைத்தான் குறிப்பிடுகிறார் என்று பேசப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை நம் நாட்டில் புதிய உச்சத்தில் உள்ளது. இவ்வளவுக்கும் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இருந்ததை காட்டிலும் தற்போது மிகவும் குறைவாக உள்ளது.

எரிபொருள், ரயில் கட்டணம் அதிகரிப்பு.. தவறான வாக்குறுதிகளின் மாயை உடைந்து விட்டது.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டீசல், பெட்ரோல் விலை உயர்வு

அதேசமயம், அப்போது இருந்ததை காட்டிலும் இப்பம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அதிகப்படியான வரியை இதற்கு காரணம். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எரிபொருள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், எரிபொருள் மீதான வரியை பாதியாக குறைத்து பெட்ரோல் மற்றும் டீசலை விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.