பஜ்ரங் தளத்தின் பேஸ்புக் பக்கத்தை தடை செய்ய வேண்டிய அவசியமில்லையா? பேஸ்புக் பொய் சொல்கிறதா.. ராகுல் காந்தி

பஜ்ரங் தளத்தின் பேஸ்புக் பக்கத்தை தடை செய்ய வேண்டிய அவசியமில்லையா? பேஸ்புக் பொய் சொல்கிறதா.. ராகுல் காந்தி

இந்து அமைப்பான பஜ்ரங் தளத்தின் பேஸ்புக் பக்கத்தை தடை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் கருத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் இந்தியா நிறுவனம் வணிக நோக்கங்களுக்காக பா.ஜ.க. மற்றும் வலதுசாரி அமைப்புகளின் சர்ச்சை பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தியை மேற்கோள்காட்டி ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தலைவரான சதி தரூர் இநத விவகாரத்தை விசாரிக்க முடிவு செய்தார்.

பஜ்ரங் தளத்தின் பேஸ்புக் பக்கத்தை தடை செய்ய வேண்டிய அவசியமில்லையா? பேஸ்புக் பொய் சொல்கிறதா.. ராகுல் காந்தி
பேஸ்புக்

நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகும்படி பேஸ்புக் இந்தியா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் உண்மை கண்டறியும் குழுவின் ஆலோசகர் அஜித் மோகன் நிலைக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, பஜ்ரங் தளத்தின் பேஸ்புக் பதிவுகள் எங்களின் சமூக ஊடக ஊடக கொள்கைகளை மீறும் எந்தவொரு கூறுகளும் கண்டுபிடிக்கவில்லை. எனவே அதனை தடை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார். பேஸ்புக் இந்தியாவின் இந்த முரண்பாடான கருத்துக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பஜ்ரங் தளத்தின் பேஸ்புக் பக்கத்தை தடை செய்ய வேண்டிய அவசியமில்லையா? பேஸ்புக் பொய் சொல்கிறதா.. ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், பஜ்ரங் தளம் உள்ளடக்கம் (பதிவுகள்) ஆபத்தானது என்றும் தடை செய்யப்பட வேண்டும் என்றும் பேஸ்புக் யு.எஸ். (அமெரிக்கா) சொல்கிறது. பேஸ்புக் இந்தியா நம் நாடாளுமன்ற குழுவிடம் பஜ்ரங் தளம் பதிவுகள் ஆபத்தானது அல்ல என்று கூறுகிறது. பேஸ்புக் நிறுவனம் இந்தியாவிடமும், அதன் நாடாளுமன்றத்திலும் பொய் சொல்கிறதா? என பதிவு செய்து இருந்தார். மேலும், அந்த டிவிட்டில் வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தளத்தை விமர்சித்து வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் செய்தியையும் அதனுடன் பகிர்ந்து இருந்தார்.